அ.தி.மு.க.வின் முன்னாள் எம்.எல்.ஏவாகவும், புதுக்கோட்டை மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவருமான கார்த்திக் வி.ஆர்.தொண்டைமான், இன்று தி.மு.க.வில் இணைய பெற்றார். இந்த இணைப்பு நிகழ்வு, சென்னை அண்ணா அறிவாலயத்தில், தமிழக முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்றது.
கார்த்திக் வி.ஆர்.தொண்டைமான், நீண்ட காலமாக அ.தி.மு.க.வில் செயல்பட்டு வந்தவர். அவர் புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் எம்.எல்.ஏவாகவும், புதுக்கோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவராகவும் இருந்துள்ளார்.
இந்த நிகழ்வில், தி.மு.க.வின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, புதுக்கோட்டை தெற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ரகுபதி, வடக்கு மாவட்டச் செயலாளர் கே.கே.செல்லபாண்டியன், அயலக அணி மாநிலச் செயலாளர் எம்.எம்.அப்துல்லா, செய்தித் தொடர்புத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்ததிலிருந்து கட்சியில் ஏற்பட்ட அதிருப்தியால், அண்மையில் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைய வந்துள்ள தலைவர்கள் வரிசையில், கார்த்திக் வி.ஆர்.தொண்டைமான் பெயரும் சேரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.