சென்னை: “இ.பி.எஸ்., தானாகவே பேசவில்லை. அவரை யாரோ பேச வைக்கிறார்கள்” என வீசி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஊடகக் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது, “தி.மு.க.,வுக்கு கம்யூனிஸ்ட், வீசி உள்ளிட்ட கட்சிகள் அடிமை சாசனம் எழுதி கொடுத்துள்ளன” என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்ததற்கான கேள்விக்கு பதிலளித்த திருமா,
“இது ஒரு திட்டமிட்ட செயல்திட்டமாக இருக்கலாம். இ.பி.எஸ்., மக்களுக்காக பேசுவதற்கு பதிலாக, தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சிகளை விமர்சிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். யாரோ அவரை இவ்வாறு பேச வைக்கிறார்கள் என்பதே வெளிப்படையாக தெரிகிறது” எனக் குறிப்பிட்டார்.
மேலும்,
“இது ஒரு அஜெண்டா போலவே உள்ளது. எதற்காக இப்படி பேசுகிறார் என்பது சாதாரண மக்களுக்கே புரியும் நிலையில் உள்ளது” என தெரிவித்தார்.
அதே நேரத்தில், திருவள்ளூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதற்கான கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன்,
“குற்றம் நடைபெற்ற 10 நாட்கள் ஆன பிறகும், குற்றவாளி கைது செய்யப்படவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது. போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விசாரணைக்கு சிறப்பு புலனாய்வு குழுவை நியமிக்க வேண்டும்” என்றும்,
“குற்றவாளி யாராக இருந்தாலும் கைது செய்து, சட்டப்படி கடுமையாக தண்டிக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.