துரோகிகள் இருந்ததால் தான் 2021 அதிமுக ஆட்சிக்கு வர முடியவில்லை – எடப்பாடி பழனிச்சாமி

மதுரை திருமங்கலத்தில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டியில்,
“நெல் கொள்முதல் முறையாக செய்யப்பட்டிருந்தால் விவசாயிகள் சாலையில் நெல்லை குவித்து வைக்க அவசியமில்லை. தொடர் மழையின் காரணமாக சாலையில் குவித்து வைக்கப்பட்ட நெல் முளைத்து விட்டது. விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். 15 நாட்களாக நேரடி கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படவில்லை என விவசாயிகள் சொன்னார்கள்.

நெல் வீணாகியது தொடர்பாக நான் பேசியதில் என்ன அவதூறு இருக்கிறது? விவசாயிகளை சந்தித்தால் பிரச்சனை ஏற்படும் என்பதால் துணை முதலமைச்சர் டெல்டா விவசாயிகளை சந்திக்கவில்லை. பாதிக்கப்படுகின்ற விவசாயிகளை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவில்லை. இந்தியாவிலேயே இப்படி ஒரு முதல்வரை பார்த்ததில்லை.

திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் 2022 முதல் 2026 வரை கொள்கை விளக்க குறிப்பில் 1 கோடியே 15 லட்சம் மெட்ரிக் டன் நெல் தான் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விளம்பர மாடல் அரசு இது என்பது நிரூபணமாகி விட்டது. கொள்கை விளக்க குறிப்பில் சொன்னது உண்மையா? முதலமைச்சர் நேற்று சொன்னது உண்மையா? நெல்லை முறையாக கொள்முதல் செய்ய திராணி இல்லாத பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின்.

பள்ளிக்கரணை சதுப்பு நிலக்காடுகள் அதிமுக ஆட்சியில் பாதுகாக்கப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியில் விதிமுறை மீறி வனத்துறை கட்டுப்பட்டு பகுதியில் கட்டுமான பணிகள் துவங்கப்பட்டு உள்ளது. இதில் பல நூறு கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்று உள்ளது.

சார் என்றாலே திமுகவுக்கு அலர்ஜி. Sir என்ன பிரச்சனை திமுகவுக்கு இருக்கிறது என தெரியவில்லை. தகுதியான வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும். Sir பார்த்து ஆளும் திமுக அரசு எதற்காக பயப்படுகிறது?” என தெரிவித்தார்.

டிடிவி, ஓபிஎஸ், செங்கோட்டையன் சந்திப்பு குறித்த கேள்விக்கு, “நான்கு ஆண்டுகளாக தினகரன் இப்படி சொல்லிக்கொண்டு தான் இருக்கிறார். இப்படிப்பட்ட துரோகிகள் காரணமாகவே எங்களால் ஆட்சிக்கு வர முடியவில்லை. செங்கோட்டையனை நீக்குவதில் எனக்கு தயக்கமில்லை. இனிமேல் தான் நடவடிக்கை எடுக்கப்படும்.

சசிகலாவை சந்திப்பது அவரவர் விருப்பம். எத்தனை துரோகி வந்தாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது. மூவரும் ஒன்றிணைந்து எந்த விளைவையும் ஏற்படுத்தாது.
செங்கோட்டையன் குழி பறித்ததால் தான் அந்த தொகுதியில் அதிமுக ஜெயிக்க முடியவில்லை. மூவரும் ஒன்றிணைவதால் அதிமுகவுக்கு எந்த பலவீனமும் இல்லை. பயிர் வளர வேண்டும் என்றால் களை எடுக்க வேண்டும்” என்றார்

தேசிய ஜனநாயக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் வரவுள்ளதாக நியூஸ் 18 பேட்டியில் அமித்ஷா சொன்னது குறித்த கேள்விக்கு, “அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. அதிமுக தவெக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை, அவர்களும் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அதிமுக அமைக்கும் கூட்டணி வெற்றி பெறும். அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.

அதிமுக கூட்டத்தில் தவெக தொண்டர்கள் கொடியை காட்டியதற்காக தொண்டர்கள் பிள்ளையார் சுழி போட்டதாக சொன்னேன். எங்கள் கட்சி கூட்டத்திற்கு விருந்தாளி போல வந்தவர்கள் தவெக தொண்டர்கள். அவர்களை வேண்டாம் என சொல்ல முடியுமா?” என கூறினார் உங்கள் வீட்டுக்காரர்கள் மூணு பேர் வருகிறேன் என்று சொல்கிறார்கள் என்று டிடிவி சசிகலா ஓபிஎஸ் குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு எதற்கு உளை வைப்பதற்காக? ஏற்கனவே நாங்கள் படிக்கிற நம்பளும் பத்தலையா இப்படிப்பட்ட நிலைமைக்கு அவங்க தானே காரணம் என்றார்.

Exit mobile version