சமூக வலைதளங்களில் தற்போது ஏ.ஐ சாரி (AI Saree) எனப்படும் புதிய டிரெண்ட் வேகமாக பரவி வருகிறது. கூகுள் ஜெமினியின் Nano Banana ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலம், பயனர்கள் தங்கள் புகைப்படங்களை அப்லோடு செய்து விரும்பிய வடிவம் மற்றும் நிறத்தில் சீருடைகளை மாற்றிக் கொள்ள முடிகிறது. இதன் காரணமாக, ஏராளமான பெண்கள் தங்களது புகைப்படங்களை ஏ.ஐ சாரி வடிவத்தில் மாற்றி சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த புகைப்படங்களை அடிப்படையாகக் கொண்டு, பலரும் விண்டேஜ் பாடல்களை இணைத்து ரீல்ஸ் உருவாக்கி, அதிக லைக்குகளையும் பின்தொடர்வுகளையும் பெற்று வருகின்றனர். இதனால், ஏ.ஐ சாரி தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
ஆனால், இதில் சில ஆபத்துகள் உள்ளன என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக, இணையத்தில் அப்லோடு செய்யப்படும் புகைப்படங்கள் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டு, மார்பிங் போன்ற செயல்களுக்கு இடமளிக்கக் கூடும் அபாயம் இருப்பதாக அவர்கள் எச்சரித்துள்ளனர்.
எனவே, பயனர்கள் தங்கள் தனிப்பட்ட மற்றும் சென்சிடிவான புகைப்படங்களை அப்லோடு செய்வதை தவிர்க்க வேண்டும். அதேபோல, லொகேஷன் டேக்குகளை அணைத்துவைப்பது, புகைப்படங்களை யாருக்கெல்லாம் பகிரலாம் எனத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்துவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.