அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள ஒரு சிவன் ஸ்தலம். அருள்மிகு ஆனந்தவல்லி உடனுறை அகத்தீஸ்வரர் திருக்கோயிலாகும். இந்த கோயிலுக்குள் பிரச்சன்ன வெங்கடேச பெருமாள் அசலாத்தம்மன் கோயில் அகத்தீஸ்வரர் கோயில் 3 கோயில்களும் ஒருசேர அமைந்துள்ளது.
பொம்மைராஜ என்ற அரசன் ஆட்சிபுரிந்த இந்த இடம் பெம்மைராஜபுரம் என்று அழைக்கப்பட்டது. இந்த மன்னனுக்கு தீராத வயிற்றுவலி அவதிப்பட்டிருந்தார் அப்போது இத்தலத்தில் உள்ள குளத்தில் குளித்துவிட்டு அகத்தீஸ்வரர் வணங்கினாள் இந்த தீராத வயிற்று வலி தீரும் என்று பெருமாள் வேண்டிய மன்னனுக்கு கனவில் கூறினார்.
அதன்படி மன்னனும் குளத்தில் முழ்கி சிவபெருமானை தன்னுடைய அகத்தில் வைத்து வழிப்பட்டார். இதன் காரணமாக இந்தலத்திற்கு அகத்தீஸ்வரர் என்று பெயர் பெற்றார். பெருமாள் அருளபடி மன்னனுக்கு தீராத வயிற்றுவலி தீர்ந்தது. இத்தலத்திற்கு தல விருச்சமாக வன்னிமரம் விளங்கி வருகிறது.

இந்த திருக்கோயிலுள்ள சுக்ரவார அம்மனின் பல்லக்கை பெண்கள் தூக்கி வருவது மிகவும் சிறப்பாகும். அகத்தீஸ்வரரும் ஆனந்த வல்லி அம்மனும் தனித்தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். இந்தலம் சிவன் கோயிலாக இருந்தாலும் இங்குள்ள சுக்ரவார அம்மனே மிகவும் பிரசித்தி பெற்றது. சுக்ரவார அம்மன் பல கோயில்களில் இருந்தாலும் இங்கு மட்டும் தான் அம்மனுக்கு திருவீதி உலா நடைபெறுகிறது.
அசுரர்களின் குருவான சுக்ராச்சாரியார் வாமனரால் இருந்த தன் கண்பார்வையைப் பெற சிவ வழிபாடு செய்தார். அந்த சமயத்தில் அம்பிகையும் சிவனாரை வேண்டி தவம் செய்து கொண்டிருந்தாள் இருவரில் யாருக்கு முதலில் அருள்வது என்று சிவன் யோசித்தபோது சுக்ரனுக்கே முதலில் ஆசிவழங்கும்படி விட்டுக்கொடுத்தாள் அம்பிகை. அதனால் தனக்கு உரிய வெள்ளிக்கிழமையை அம்பிகைக்கு உரியாக ஏற்க வேண்டும் என பூஜிப்பவர்க்கு சுக்ரனின் தோஷம் வரக்கூடாது என்றாhள் தேவி.
ஏற்றார் சுக்ரபகவான் சுக்ரவாரம் என்றால் வெள்ளிக்கிழமை அன்று பூஜை ஏற்பதால் இங்குள்ள அம்மன் சுக்ரவார அம்மன் என்று அழைக்கப்படுகிறாள்.
இந்த திருக்கோயில் அமைந்துள்ள பைரவர் சன்னதி மிகவும் பிரசித்தமானது. தேய்பிறை அஷ்டமி பைரவர் என்று அழைக்கப்படுகிறார். ஓவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்று பௌர்ணமி 8ம் நாள் பைரவருக்கு எலும்பிச்சை பழம் வைத்து பூஜை செய்து வந்தாள். நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம்.
திரிசூலநாதர் திருக்கோயில் அருள்மிகு திரிசூலநாதர் திருக்கோயில் சென்னை திரிகூூலத்தில் அமைந்துள்ளது. மூலவர் திரிசூலநாதரும் உற்சவர் சந்திரசேகரர் தாயார் திரிபுரசுந்தரியாக அருள்பாலிக்கிறார்கள். திரிசூலநாதர் ஆலயம் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமை சிறப்புக் கொண்டது. தற்போதுள்ள ஆலயத்தை சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாம் குலோத்துங்க சோழ மன்னன் கட்டியதாகக் கூறப்படுகிறது.
புராதன சிறப்பு மிக்க புனிதமான திருத்தலமாகும். நான்கு மலைகளுக்கு மத்தியில் இத்தலம் உள்ளது. இதன் மூலம் இத்தலத்தில் ஈசன், நான்குவகை வேதங்களுக்கும் உட்பொருளாய் இருப்பதாக கருதப்படுகிறது. கோடி கோடியாய் கொட்டி வைத்திருந்தாலும், தங்கமும் வைரமும் குவிந்திருந்தாலும் மன அமைதி இழந்து தவிப்பவர்கள் பலர் உண்டு.
பணமே இல்லையென்றால் நிம்மதியுடனும், மன அமைதியுடனும் இருப்பவர்கள் இன்றைக்கு இருக்கின்றனர். மனஅமைதி வேண்டும் என்பவர்கள் திரிசூலம் ஸ்ரீதிரிபுரசுந்தரி சமேத திரிசூலநாதர் ஆலயத்திற்கு சென்று வந்தால் மன அமைதி கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும். ஆதிகாலத்தில் இந்த தலம் வானவன் மாதேவி சதுர்வேதி மங்கலம், திருநீற்றுச் சோழநல்லூர் திருச்சுரம், சுரத்தூர், பிரம்மபுரி என்றெல்லாம் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டது. இத்தலத்து ஈசனின் பெயர் திரிசூலநாதர் என்பதால் நாளடைவில் திரிசூலம் என்ற பெயர் நிலைத்து விட்டது.
இந்த தலத்துக்கு வந்த பிரம்மன் தனது படைப்புத் தொழில் எந்தவித இடையூறும் இல்லாமல் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று இப்பகுதியில் ஒரு குளம் ஏற்படுத்தி, அதன் அருகில் ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டு ஈசனின் அருளைப் பெற்றார். இதனால்தான் இந்த ஊருக்கு பிரம்மபுரி என்றும், இத்தலத்து ஈசன் பிரம்மபுரீஸ்வரர் என்றும் அழைக்கப்பட்டார்.
திரிசூலநாதர் ஆலயம் கிழக்கு நோக்கி கட்டப்பட்டுள்ளது. வாசலுக்கு எதிரில் விநாயகர் உள்ளார். அவரை வழிபட்டு பிறகு கொடி மரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றை வணங்கி உள்ளே செல்லாம். ஈசன் கிழக்கு முகமாக உள்ளார். ஈசனின் இடதுபுறம் சொர்ணம்பிகை நின்ற கோலத்தில் உள்ளார்.
வெளிநாட்டவர்கள் இத்தலத்தை சூறையாடிய போது அம்மனின் கை உடைந்து போனது. இதனால் புதிதாக திரிபுரசுந்தரி சிலை செய்து அந்த இடத்தில் பிரதிஷ்டை செய்தார்களாம்.
அன்று இரவே அர்ச்சகர் கனவில் தோன்றிய சொர்ணம்பிகை, என்னை லிங்கம் அருகிலேயே வைத்திருங்கள் என்று கூறினாளாம். இதைத் தொடர்ந்து சொர்ணம்பிகை கை உடைக்கப்பட்ட இடத்தில் தங்கத்தால் செய்து பொருத்தி, மீண்டும் பழைய இடத்தில் பிரதிஷ்டை செய்தார்களாம். அங்கிருந்த திரிபுரசுந்தரி தனி சன்னதிக்கு மாற்றப்பட்டாள்.அந்த சன்னதி தெற்கு நோக்கி காட்சித் தருகிறது.
இங்குள்ள மலை குகைகளில் பஞ்ச பாண்டவர்கள் வனவாசத்தின்போது வந்து தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இறகு இல்லாத சரபேஸ்வரர் இங்கு அருள்பாலிக்கிறார். நரசிம்மரின் உக்கிரம் தணிக்க வந்த சரபேஸ்வரர் தன் சுயரூபத்துடன் ஒரு தூணில் காட்சி தருகிறார். சரபேஸ்வரருக்கு சரபம் என்ற பறவையில் இறக்கை இருக்கும் இங்கே இறக்கை இல்லை இரண்டு முகங்கள் இரு கைகளில் மான் மழு ஏந்தியுள்ளார்கள். மற்ற இரு கைகளாலும் நரசிம்மரை பிடித்த கோலத்தில் உள்ளார் இத்தகைய அமைப்பில் சரபேஸ்வரரைக் காண்பது அபூர்வம்
பயம் நீங்க அமைதியான வாழ்க்கை அமைய இவருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக திரிபுரசுந்தரிக்கு வெள்ளிக்கிழமைகளில் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அதுவும் ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் பூப்பாவாடையுடன் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.
இங்குள்ள தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. பிரம்மன் இந்த தீர்த்தத்தை உண்டாக்கி நீராடி சிவனை வணங்கி மோட்சம் பெற்றார் என்று தல வரலாற்றில் உள்ளது. எனவே இந்த புனித தீர்த்தத்தில் நீராடி ஈசனை வழிபட்டால் நன்மை கிடைக்கும் என்பது நம்பிக்கை. கோஷ்டத்தில் வீராசன தட்சிணாமூர்த்தி இடது காலை குத்திட்டு அமர்ந்திருக்கிறார். பொதுவாக தட்சிணாமூர்த்தி கீழேயுள்ள சீடர்கள் வணங்கியபடிதான் இருப்பர் ஆனால் இங்கு சீடர்கள் இருவர் சின்முத்திரை காட்டியபடி இருக்கின்றனர். இத்தகைய அமைப்பைக் காண்பது அபூர்வம்.
இந்த தலத்தில் வீற்றிருக்கும் விநாயகத் “ நாக யக்ஞோபவீத கணபதி என்று அழைக்கப்படுகிறார். உடலுள்ள ஆறு ஆதாரங்களில் மூலாதார சக்தியான குண்டலினி நாக வடிவில் இருக்கிறது. இவரது சிலை சுவரைக் குடைந்து உருவாக்கப்பட்டிருக்கிறது. நாகதோ~ம் உள்ளவர்கள் இவருக்கு அபிஷேகம் செய்து வேண்டிக்கொண்டாள் தோஷம் நிவர்த்தி ஆகும் என்பது ஐதீகம்.