அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆரம்பிக்கப்பட்டு 54 ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வர்த்தக வணிக வளாகம் அருகே அமைந்துள்ள எம்ஜிஆர் திரு உருவ சிலைக்கு அஇஅதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் திருப்பத்தூர் தெற்கு மாவட்ட செயலாளர் டைகர் என்எஸ்கே இளங்கோவன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முன்னதாக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை திருஉருவ சிலைக்கு அருகே நிறுத்திவிட்டு ஆர்வ மிகுதியால் தானே கடைக்கு சென்று மாலை வாங்கி வந்து தொண்டர்களுடன் எம்ஜிஆர் வாழ்க அம்மா வாழ்க ஓபிஎஸ் அய்யா வாழ்க என கோஷங்கள் எழுப்பி பின்பு மாலை அணிவித்த சம்பவம் தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மாவட்ட அவைத்தலைவர் பல்லவன் மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் சாரங்கன் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஐயூப் மாவட்ட மகளிர் அணி செயலாளர் கிரிஜா
நகர செயலாளர் புருஷோத்தமன்
ஜோலார்பேட்டை ஒன்றிய செயலாளர் அன்பரசன்
கந்திலி ஒன்றிய செயலாளர் கே ஜி ஞானசேகர் ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் பெருமாள்
ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பரசு
திருப்பத்தூர் நகர தலைவர் மூர்த்தி கந்திலி வடக்கு ஒன்றிய செயலாளர் கஜராஜா கந்திலி மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மாவட்ட துணை செயலாளர் பூபதி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

 
			














