ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பேரழிவு நிலநடுக்கம் பல உயிரிழப்புகளை ஏற்படுத்தி, நாடு முழுவதும் துயரத்தை உண்டாக்கியுள்ளது. 100-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து நொறுங்கிய நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 800-ஐ கடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயிருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் நிலவுகிறது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் மக்களுடன் இந்தியா ஒற்றுமையாக நிற்பதாகவும், தேவையான அனைத்து மனிதாபிமான உதவிகளையும் வழங்க தயாராக இருப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
தனது எக்ஸ் சமூக வலைதள பதிவில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது :
“ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து ஆழ்ந்த துயரத்தில் உள்ளேன். இந்த கடினமான நேரத்தில் துயரமடைந்த குடும்பங்களுடன் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து சாத்தியமான மனிதாபிமான உதவிகளையும், நிவாரணங்களையும் இந்தியா வழங்க தயாராக உள்ளது.”
இதன் மூலம், ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இந்தியா தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.
















