முன்னாள் முதல்வர் MGR-ன் நினைவு தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில் ADMK-வினர் அவரின் திருஉருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. அதன் ஒரு நிகழ்வாக மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் அதிமுகவினரால் எம்ஜிஆரின் 38வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் அதிமுகவினர் திரளாக கலந்து கொண்டு கிட்டப்பா அங்காடி முன்பு அமைக்கப்பட்டு இருந்த எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர். இதில் முன்னாள் மாவட்ட செயலாளர் விஜிகே செந்தில்நாதன், முன்னாள் எம்எல்ஏக்கள் ராதாகிருஷ்ணன் சக்தி ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Exit mobile version