தள்ளிவிட்டு செல்பி எடுக்க வரக்கூடாது ரசிகர் மீது கோபபட்ட நடிகை ஐஸ்வா்யா ராஜேஷ்

மதுரை மாநகர் கே.கே.நகர் பகுதியில் உள்ள தனியார் நகைக்கடை திறப்புவிழாவில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்துகொண்டார்.

அப்போது நடிகை ஐஸ்வர்யா ராஜேசுடன் செல்பி எடுப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் வருகை தந்தனர். அப்போது ரசிகர் ஒருவர் அருகில் இருந்த பெண் ஒருவரை தள்ளிவிட்டபடி செல்பி எடுக்க வந்தார்.

அப்போது அந்த பெண் தடுமாறியதை பார்த்த ஐஸ்வர்யா ராஜேஷ் ரசிகர் மீது கோப்பட்டதோடு இது போன்று பெரியவங்கள தள்ளிவிட்டுட்டு செல்பி எடுக்க வரக்கூடாது என கடிந்துகொண்டார். பின்னர் செல்பி எடுத்தார். பின்னர் நடிகை ஐஸ்வர்யா ராஜேசை நகைக்கடை உரிமையாளர் கையை பிடித்தபடி பத்திரமாக அழைத்துசென்று ஒவ்வொரு நகைகளையும் காண்பித்தார்.

இதனையடுத்து நடிகை ஐஸ்வர்யாவிடம் ரசிகர் ஒருவர் பாட்டு பாடுங்கள் என கேட்க மற்றொரு ரசிகரோ அண்ணன் ஒரு பாட்டு கேட்கிறாரு சொல்லும்போது அண்ணாச்சி அண்ணாச்சி உங்களுக்கு என்னாச்சு என்னாச்சு என கலாய்த்தார்.

Exit mobile version