நடிகர் வடிவேல் மிகப்பெரிய கஞ்சன் ஆனால் நடிப்பில் மிகப்பெரிய திறமைசாலி, மயிலாடுதுறை பள்ளி விழாவில் பிரபல காமெடி நடிகர் சாரப்பாம்பு சுப்புராஜ் பேச்சு:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் கலைமகள் மெட்ரிக் பள்ளியின் ஆண்டு விழா மற்றும் கிட்ஸ் fest நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. விழாவில் தமிழகத் திரைப்பட பிரபல காமெடி நடிகர் சாரைப்பாம்பு சுப்புராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய அவர், நடிகர் வடிவேலு 2011 ஆம் ஆண்டு தேர்தலில் விஜயகாந்த் பற்றி தவறாக பேசியதற்காக அவருடன் நடிப்பதை தவிர்த்தேன். நடிகர் வடிவேலு மிகப் பெரிய கஞ்சன். அவருடைய உதவியாளர்களுக்கு கூட சாப்பாடு வாங்கி தர மாட்டார். ஆனால் நடிப்பில் மிகப்பெரிய திறமைசாலி என்று குறிப்பிட்ட அவர், புரட்சித்தலைவர் எம்ஜிஆர், விஜயகாந்த் மற்றும் தன்னை சினிமாவில் அறிமுகப்படுத்திய கண்ணதாசன் ஆகியோரை வாழ்வில் மறக்க மாட்டேன் என்று தெரிவித்தார். தொடர்ந்து மாணவர்களுடன் கலந்துரையாடினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவ மாணவியர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

















