நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்தநாள் விழா திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள சிவாஜியின் சொந்த ஊரான வேட்டை திடல் கிராமத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர் அதனை தொடர்ந்து திருவாரூர் மாவட்ட மண்ணின் மைந்தர்கள் வரலாற்று ஆய்வு மைய நிறுவனர் வரலாற்று ஆய்வாளர் எடையூர் மணிமாறன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில் பராசக்தி திரைப்படத்தில் அறிமுகமான நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தமிழ்த் திரையுலகில் உச்சத்தை தொட்டவர். இப்படி நிலைத்த புகழைக் கொண்ட நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு கதை வசனங்கள் எழுதியதின் மூலம் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களும் சிவாஜியும் நெருக்கமான நண்பர்களாக திகழ்ந்தனர். தாதா சாகேப் பால்கே விருது, பத்மஸ்ரீ, பத்மபூஷன் போன்ற மத்திய அரசின் உயரிய விருதுகளை பெற்ற இவர் அமெரிக்க அரசாங்கத்தால் ஒரு நாள் மேயராகவும் பதவியில் அமர்த்தப்பட்டு அழகு பார்க்கப்பட்டவர். இதனால் உலக அரங்கில் பேராளுமையாக நிலைத்த புகழுடன் விளங்குகிறார். இவ்வளவு புகழுக்குரிய மாமனிதர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு அவரின் பூர்வீக கிராம மான வேட்டை திடலில் அவர் வாழ்ந்த இடத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் சிவாஜி நினைவு இல்லம் அமைக்க வேண்டும் என்றும் அவர் பிறந்த நாளான அக்டோபர் 1ஆம் நாளை “நடிகர்கள் தினமாக” அறிவிக்க வேண்டும். வருகின்ற 2028 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் பிறந்த நூற்றாண்டு தொடங்க இருப்பதால் அவருக்கு நூற்றாண்டு விழாவினை தமிழ்நாடு அரசு அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேற்கண்ட கோரிக்கைகளை வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரிலே அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார் . இந்நிகழ்ச்சியில் நடிகர்திலகத்தின் உறவினர்கள் வேட்டைதிடல் கிராமக்கள் சிவாஜி பிரகாஷ் . மூத்த பத்திரிக்கையாளர் நவமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .


















