திருவாரூர் அருகே கடைவீதியில் இளைஞர் வெட்டிக்கொலை.
கொரடாச்சேரி போலீசார் விசாரணை.
திருவாரூர் அருகே அம்மையப்பன் காந்தி நகர் புதுத் தெருவை சேர்ந்த துரைராஜ் மகன்
நந்தகுமார் 30 கொத்தனார் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று இரவு கடைவீதியில் நின்ற நந்தகுமாரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கொரடாச்சேரி போலீசார் உடலை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
பழிக்கு பழி கொலை செய்ய வந்த போது வேறு ஒருவரை கொல்ல முயன்ற போது ஆள் மாறி நந்தகுமார் கொலை செய்யப்பட்டதாக போலீசார் முதற் கட்ட விசாரணையில் தெரிய வருகிறது .
