திருவாரூர் அருகே திருநெய்ப்பேர் பூதமங்கலச்சேரி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி சசிகலா. இவர்களுக்கு 5 குழந்தைகள்.
இதில் 3 வது பெண் மீரா (17) திருவாரூரில் உள்ள கடையில் வேலை பார்த்து வந்தார். இன்று உடல்நிலை சரியில்லாத நிலையில் நகர்பகுதிக்கு வந்த அவர் பழைய பேருந்து நிலையத்தில் மோகனூர் செல்லும் பேருந்தில் ஏற முயன்ற போது பேருந்து புறப்பட்டுள்ளது .
அப்போது படிக்கட்டிலிருந்து தவறி கீழே விழுந்தவர் மீது பேருந்தின் பின் டயர் ஏறி இறங்கியது. இதில், தலை நசுங்கி சம்ப இடத்திலேயே மீரா உயிரிழந்தார்.
தகவலறிந்த நகர போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்
















