மயிலாடுதுறை அருகே நல்லத்துக்குடி கிராமத்தை சேர்ந்தவர் விமல்ராஜ்.32. ஆட்டோ டிரைவர். இவருக்கும் சீர்காழி அருகே அரசூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகள் காவியா.28. என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து ஒரு மகன், மகள் உள்ளனர். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் நேற்று விமல்ராஜ் வேலைக்கு சென்றிருந்த நிலையில் காவியா வீட்டில் தூக்கிட்ட’ நிலையில் சடலமாக தொங்கியுள்ளார். தகவல் அறிந்த காவியாவின் தாய் பாஞ்சாலை மயிலாடுதுறை போலீஸ் ஸ்டேஷனில் தனது மகள் வரதட்சணையின் கொடுமையால் இறந்ததாக அளித்த புகாரின் பேரில் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து இறந்த காவியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்
