கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே தின்னூர் கிராமத்தைச் சேர்ந்த எட்வின் பிரியா (வயது 23) என்பவர், எம்பிஏ படிப்பை முடித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
சில நாட்களுக்கு முன்பு, அவரை ஒரு நாய் கடித்ததாக தெரிகிறது. ஆனால் அதைப் பற்றி பெரிதாக கவலைப்படாமல் அவர் எந்தவித மருத்துவ சிகிச்சையும் பெறாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு, அருகிலுள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு ஆரம்ப சிகிச்சை வழங்கப்பட்ட பிறகு, அவரது உடல்நிலை மோசமானதால் மேம்பட்ட சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த எட்வின் பிரியா, மூச்சுத்திணறல் அதிகரித்து இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இளம் வயதிலேயே நடந்த இந்த மரணம் அவரது குடும்பத்தினரையும், கிராம மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.