பூம்புகார் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகனுக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் செம்பனார்கோவில் கடைவீதியில் உற்சாக வரவேற்பு. அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து கூட்டணி கட்சியினரிடம் வெற்றி பெற செய்ய ஒத்துழைப்பு வழங்க வேண்டுகோள் விடுத்தார்:-
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம் முருகன் மீண்டும் பூம்புகார் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பூம்புகார் தொகுதி செம்பனார்கோவிலுக்கு வந்த வேட்பாளர் நிவேதா முருகன் எம்எல்ஏவுக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வேட்பாளர் நிவேதா முருகன் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் வேட்பாளர் நிவேதா முருகனுக்கு மாலை மற்றும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இதில் பேசிய வேட்பாளர் நிவேதா முருகன் எம் எல் ஏ கூறுகையில் இரண்டாவது முறையாக வேட்பாளராக போட்டியிடும் தன்னை வெற்றி பெறச் செய்ய கூட்டணி கட்சி நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக்கொண்டார்.

















