மயிலாடுதுறை மாவட்டத்திற்கு கிடைத்த வெற்றி. பருவம் தவறிய மழையால் பாதித்த விவசாயிகளுக்கு 63கோடி ரூபாய் நிவாரணம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் சம்பா மற்றும் குருவை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக கடந்த ஜனவரி மாதம் 16,17,18 ஆகிய தேதிகளில் பெய்த பருவம் தவறிய மழை பெய்தது. இதன் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை,சீர்காழி, குத்தாலம் தரங்கம்பாடி உள்ளிட்ட தாலுகாக்களில் சம்பா நடவு செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் பருவம் தவறிய மழையின் காரணமாக முற்றிலும் நீரில் மூழ்கி 67ஆயிரம் ஹெக்டர் நெற்பயிர்கள் சேதமடைந்தன. இதன் காரணமாக தமிழக அரசு உத்தரவின் பேரில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அழிந்த பயிர்களுக்கு 63 கோடி ரூபாய் நிவாரத் தொகை ஒதுக்கி வழங்குவதாக அறிவித்தது. சில காரணங்களால் அத்தொகை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கிடைக்காததால் கடந்த 12 மாதங்களாக சாலை மறியல் போராட்டம், அனைத்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் , உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்கள் விவசாயிகள் நடத்தியும், பலமுறை மாவட்ட ஆட்சியரகம், தலைமைச் செயலகம், பல்வேறு அமைச்சர்களிடமும் மனு அளித்தும் நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை. தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை அன்று மயிலாடுதுறை மாவட்ட டெல்டா பாசன விவசாய சங்க மாவட்ட தலைவர் அன்பழகன் தலைமையில் பல்வேறு சங்க பொறுப்பாளர்களுடன் சென்னை தலைமைச் செயலகத்திற்கு நேரடியாக சென்று வேளாண்துறை ஆணையரகத்தில் ஆணையரை நேரில் சந்தித்து நிவாரணத் தொகை தொடர்பாக மனுவை அளித்தனர். இது தொடர்பாக ஆணையர் தமிழக முதல்வரிடம் தெரிவித்து உடனடியாக நிவாரணத் தொகை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து அனுப்பினார். அதனைத் தொடர்ந்த பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ₹289.63 கோடி நிவாரணம் ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 6.55 லட்சம் ஏக்கர் பயிர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரணத் தொகை வழங்கப்பட இருப்பதாகவும் வேளாண் துறை அமைச்சர் MRK பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதன்மூலம், 2.80 லட்சம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக பணம் வரவு வைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்ததை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக டெல்டா பாசன விவசாய சங்க மாவட்ட தலைவர் அன்பழகன் கூறுகையில் பல்வேறு கட்ட போராட்டங்களில் விவசாயிகள் ஒன்றிணைந்து போராட்டங்கள் நடத்தியதற்கு கிடைத்த வெற்றி எனவும் நிவாரணம் தொகையை வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றிகள் தெரிவித்தனர்.

Exit mobile version