ர்காழி அடுத்த மணிகிராமம் பகுதியை சேர்ந்தவர் சிவராஜ். கஞ்சா போதையில் சுற்றி திரிந்த இவர் நேற்று மாலை நாங்கூர் பகுதியில் சாலையில் நடந்த சென்ற பெண்ணிடம் செல்போனை பிடுங்கிக் கொண்டு மிரட்டல் விடுத்தார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் சுற்றி வளைத்து பிடித்து கஞ்சா போதை வாலிபரை திருவெண்காடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஆனால் போலீசாரோ அவர் மீது எவ்வித வழக்கும் பதியாமல் கண்டித்து அவரை வெளியே அனுப்பியதாக கூறப்படுகிறது.இந்நிலையில் நேற்று இரவு திருவெண்காடு அண்ணா நகர் பகுதிக்கு சென்ற கஞ்சா போதை வாலிபர் சிவராஜ் அப்பகுதியில் உள்ளவர்களிடம் கஞ்சா எங்கே கிடைக்கும் என கேட்டு தகராறு ஈடுபட்டதுடன் அடுத்தடுத்து மூன்று வீடுகளில் உள்ள கண்ணாடிகளை உடைத்து, மின்விசிறி, மின்விளக்கு உள்ளிட்ட பொருள்களையும் கல்லால் அடித்து உடைத்துள்ளார். இது குறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பெயரில் அவரை பிடிப்பதற்காக திருவெண்காடு காவல் நிலைய காவலர்கள் விஜயகுமார் உள்ளிட்ட இருவர் சென்றுள்ளனர். கஞ்சா போதையில் இருந்த சிவராஜ் காவலர்களையும் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் மண்டை உடைந்து படுகாயம் அடைந்த காவலர் விஜயகுமார் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்ட சிவராஜை போலீசார் மற்றும் பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கஞ்சா போதையில் ரகலையில் ஈடுபட்ட வாலிபரை பிடிக்க சென்ற காவலர்களையும் போதை வாலிபர் தாக்கிய சம்பவம் திருவெண்காட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
