சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் கண்ணாடி பாலத்தில் கீறல் ஏற்பட்ட கண்ணாடியை புதிதாக மாற்றி அமைக்கப்பட்ட நிலையில் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் ஆய்வு மேற்கொண்டார்
சர்வதேச சுற்றுலா பயணிகளை கவர்ந்து வரும் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை காண பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் சுற்றுலா படகு இயக்கப்பட்டு வருகிறது. திருவள்ளூர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறை இணைக்கும் வகையில் 37 கோடி ரூபாய் செலவில் கண்ணாடி இழை பாலம் அமைக்கப்பட்டது திருவள்ளுவர் சிலை கன்னியாகுமரி கடலில் அமைக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு இதனை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடந்த டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி திறந்து வைத்தார் இந்த பாலத்தின் உறுதி தன்மையை பலமுறை ஆய்வு செய்த பொதுப்பணித்துறை பொறியாளர்கள் பாலம் வலுவாக இருப்பதாக தெரிவித்தனர் ஆனால் இரண்டாவது முறையாக பாலத்தில் உள்ள கண்ணாடி விரிசில் ஏற்பட்டு உடைந்தது ,
அந்த பகுதியில் மட்டும் தடுப்பு வைத்து அடைத்து விட்டு சுற்றுலா பயணிகளை மாவட்ட நிர்வாகம் அனுமதித்து வந்த நிலையில் நேற்று இது தொடர்பாக செய்தி வெளியானது இதனைத் தொடர்ந்து இரவோடு இரவாக பழுதடைந்த கண்ணாடியை மாற்றும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டு , கண்ணாடியை முற்றிலுமாக மாற்றி புது கண்ணாடி அமைத்துள்ளனர் இன்ஜினியரியில் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் படகில் சென்று கண்ணாடி பாலத்தின் பகுதிகளை ஆய்வு மேற்கொண்டார் , பாலத்தின் உறுதித் தன்மை குறித்து ஐஐடி பொறியாளர்கள் தர சான்று வழங்கியுள்ள நிலையில் பராமரிப்பு பணிகளை கவனமுடன் செய்ய வேண்டும் , பொதுமக்கள் நடந்து செல்லும் பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த சிலிக்கான் பேஸ்ட் ஆங்காங்கே சேதமடைந்துள்ளது. அதனை சீரமைக்க வேண்டும் , மேலும் பாலத்தின் பக்கவாட்டு கம்பியில் வெப்பம் இல்லாமல் இருக்க பெயிண்ட் பூச வேண்டும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதிபட தெரிவிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
