மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் ஏவிசி கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு நடைபெற்ற மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சியால் அதிர்ந்த அரங்கம். பொங்கல் வைத்து படையலிட்டு கலை நிகழ்ச்சியை கண்டு ரசித்த மாணவ மாணவிகள்:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தலில் உள்ள ஏ.வி.சி கல்லூரியில் பொங்கல் விழா நடைபெற்றது. ஏ.வி.சி கல்வி நிறுவனங்களின் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியும் ஏவிசி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அதிகாரியுமான வெங்கடராமன் பங்கேற்று பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார். மாணவ மாணவிகள், பேராசிரியர்கள்
கரும்பு, பச்சரிசி, மஞ்சள் மற்றும் இஞ்சி கொத்துகள் கட்டப்ட்ட மண் பானையில் சமத்துவப்பொங்கல் வைத்து தமிழர் கலாச்சார மரபுபடி சூரியன் மற்றும் பசுக்களுக்கு படைத்து கொண்டாடினர். தொடர்ந்து கல்லூரி அரங்கில் நுண்கலை மன்ற மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான சிலம்பம், சுருள், உள்ளிட்ட வீர விளையாட்டுக்கள், பரதநாட்டியம், மேற்கத்திய நடனம்,நாடகம் பாடல், இசை, சினிமா பாடல்களுக்கு மாணவ மாணவிகள் அரங்கேற்றிய நடனங்களாலும் மாணவர்களின் உற்சாக குரலாலும் அரங்கமே அதிர்ந்தது. இவ்விழாவை ஆர்வமுடன் மாணவ மாணவிகள் கண்டு ரசித்தனர்.
