மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா
சந்திரபாடி மீனவர் கிராமத்தில் 2895 மீனவ மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் 13 விசைப்படகுகள், 212 பைபர் படகுகள் கொண்டு மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.இந்த நிலையில் சந்திரபாடி கிராமம் மீனவர்கள் ஆற்றின் இருபுறமும் நேர்கல் சுவர், படகு அணையும் துறை , ஆற்றை தூர்வார வலியுறுத்தி பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகனிடம் கோரிக்கை வைத்தனர். மீனவர்களின் கோரிக்கை ஏற்று அரசு கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலன் துறை சார்பில் சந்திரபாடி கிராமத்தில் ஆற்றின் இருபுறமும் நேர்கல் சுவர், படகு அணையும் துறை, தூர்வாரும் பணிக்காக நபார்டு வங்கி நிதியின் கீழ் ரூ.32 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி நடைபெற்று வருகிறது.மேலும் தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகத்தில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் நடைபெற்ற வரும் ஏலக்கூடம்,படகு அணையும் தளம் பலப்படுத்துதல், மீன் உலர்த்தும் தளம் பணிகளை மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும்
பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான நிவேதா எம். முருகன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது
மீன்வளத்துறை அதிகாரிகள் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
















