இன்றைய தினம் இளையவேந்தர் பேரவையின் தலைமையகத்தில் நடைபெற்ற சிறப்பான நிகழ்ச்சி

இன்றைய தினம் இளையவேந்தர் பேரவையின் தலைமையகத்தில் நடைபெற்ற சிறப்பான நிகழ்ச்சியில், தலைவர் சேவாரத்னா டாக்டர் த. ஆனந்த முருகன் அவர்களின் தலைமையில் பல்வேறு பிரிவுகளுக்கான புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு பொறுப்பு வழங்கப்பட்டது. அப்போது திரு. பாரிஸ் அவர்களுக்கு அயல்நாட்டுவாழ் இந்தியர்கள் ஒருங்கிணைப்பு பிரிவின் சர்வதேச அமைப்பு செயலாளர் பதவியும், திருமதி. ஷோபா அவர்களுக்கு அதே பிரிவின் சர்வதேச அமைப்பு செயலாளர் பதவியும் வழங்கப்பட்டது. மேலும் திருமதி. கவிதா அவர்களுக்கு தாய் வீட்டு உணவு பிரிவின் திருவள்ளூர் மாவட்ட அமைப்பு செயலாளர் பொறுப்பும், திரு. காமேஸ்வர்லால் அவர்களுக்கு கலை மற்றும் இலக்கிய பிரிவின் திருவள்ளூர் மாவட்ட அமைப்பு செயலாளர் பொறுப்பும் வழங்கப்பட்டது.

இந்த நியமன நிகழ்ச்சியில் அகில இந்திய அமைப்பு செயலாளர் திரு. சுரேஷ், ஊடக பிரிவு மாநில அமைப்பு செயலாளர் திரு. லச்சாபதி alies latchiyavendhen, தென் சென்னை அமைப்பு செயலாளர் திரு. ஜெயகுமார், உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு புதிய பொறுப்பாளர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய தலைவர் டாக்டர் த. ஆனந்த முருகன் அவர்கள், இளையவேந்தர் பேரவையின் கொள்கைகள் மற்றும் சமூக சேவை பணிகள் குறித்து விளக்கி, இளைஞர்களை வழிநடத்தும் வகையில் புதிய நிர்வாகிகள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும், அமைப்பின் வளர்ச்சிக்காக ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

புதிய பொறுப்பேற்ற நிர்வாகிகள் அனைவரும் தங்களுக்கு வழங்கப்பட்ட பதவிகளுக்கு நன்றி தெரிவித்து, இளையவேந்தர் பேரவையின் இலக்குகளை மக்களிடம் கொண்டு செல்லவும், சமூக நலத்திட்டங்களை செயல்படுத்தவும் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றுவோம் என உறுதி அளித்தனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் அமைப்பின் எதிர்கால செயல் திட்டங்கள் குறித்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட மற்றும் மாநில அளவில் சேவை நடவடிக்கைகளை விரிவுபடுத்த தீர்மானிக்கப்பட்டது. பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் அதிக அளவில் பேரவையின் பணிகளில் இணைந்து சமூக மாற்றத்திற்கு பங்களிக்க வேண்டும் என்ற அழைப்பும் விடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பசுமை டிரஸ்ட் சார்பில் பசுமை மூர்த்தி அவர்களும் அவரின் குழுவினரும் சேவாரத்னா டாக்டர் த. ஆனந்த முருகன் அவர்களை நேரில் சந்தித்து பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அப்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அடையாளமாக மரக்கன்றை பரிசாக வழங்கி, இயற்கை வளங்களை காக்கும் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த சந்திப்பின்போது பேசிய சேவாரத்னா டாக்டர் த. ஆனந்த முருகன் அவர்கள்,
“பசுமை டிரஸ்ட் மூலம் பசுமை மூர்த்தி அவர்கள் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு, சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காகவும், பசுமை இல்ல வாயுக்கள் அதிகரிப்பதைத் தடுப்பதற்காகவும் சிறப்பான சேவை செய்து வருகிறார். இவ்வாறு சமூகப் பொறுப்புடன் செயல்படும் தன்னார்வ அமைப்புகள் அனைவருக்கும் முன்னுதாரணம்” என பாராட்டினார்.
மேலும் அவர், மரம் நடுதல் மட்டுமல்லாது அவற்றை பாதுகாத்து வளர்ப்பதும் மிக முக்கியம் என்றும், இளைஞர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகளில் அதிக அளவில் ஈடுபட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
புதிய பொறுப்பேற்ற நிர்வாகிகளும், பசுமை டிரஸ்ட் குழுவினரும் இணைந்து எதிர்காலத்தில் சமூக நலன் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த தீர்மானித்தனர்.

நிகழ்ச்சி உற்சாகமாகவும், ஒற்றுமை உணர்வுடன்வும் நடைபெற்று, இளையவேந்தர் பேரவையின் வளர்ச்சிக்கான புதிய பாதையை வகுத்ததாக கலந்து கொண்டோர் தெரிவித்தனர்.

Exit mobile version