சாலையில் கிடந்த 45 சவரன் தங்க நகைகளை காவல்துறையில் ஒப்படைத்த தூய்மை பணியாளர் பத்மாவை பாராட்டி அமெரிக்க வாழ் ரஜினி ரசிகர்கள் சங்கம் சார்பில் 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி நண்பர்கள் மூலம் பத்மாவிடம் ஒப்படைக்கப்பட்டது :-
சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சார்ந்த பத்மா தனியார் நிறுவனம் ஒன்றில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார் கடந்த சில தினங்களுக்கு முன்பு சாலையில் கிடந்த 45 சவரன் தங்க நகைகளை காவல்துறையிடம் ஒப்படைத்தார். இவரது நேர்மையை பாராட்டி பல்வேறு இடங்களில் பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், இவரது சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்க வாழ் ரஜினி ரசிகர்கள் மன்றம் சார்பில் பத்மாவிற்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் சார்பில் அவர்களது நண்பர்கள் பத்மாவிற்கு நேரில் இந்த தொகையை வழங்கி பாராட்டு தெரிவித்தனர். இதனைப் பெற்றுக் கொண்ட பத்மா நன்றி தெரிவித்துக் கொண்டார்.
