விவசாயிகள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெறுவதுடன் விவசாயிகளை விடுதலை செய்ய அதிரடி தீர்மானம்

விவசாயிகள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெறுவதுடன், பொங்கல் முதல் சிறையில் வாடும் ஈசன் முருகசாமி உள்ளிட்ட விவசாயிகளை விடுதலை செய்ய வேண்டும், கிராம சபை கூட்டத்தில் அதிரடி தீர்மானம் :-

நாட்டின் 77 ஆவது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றது. மயிலாடுதுறை அடுத்த மாப்படுகை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர். இதில் முக்கிய தீர்மானமாக, கறி கோழி விவசாயிகள் பிரச்சனையில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் ஈசன் முருகசாமி உள்ளிட்ட விவசாயிகளை பொங்கல் தினத்தன்று தமிழக அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. அவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்வதுடன் விவசாயிகள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என தீர்மானம் இயற்றப்பட்டது.

Exit mobile version