வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பேரணி

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தும் பணி இந்திய தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நவம்பர் 4ஆம் தேதி முதல் டிசம்பர் 4ஆம் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு வாக்காளர்களின் இல்லங்களுக்கு சென்று வாக்குச்சாவடி அலுவலர்கள் திருத்தப் பணிகளை மேற்கொள்கின்றனர். அடுத்து வரும் வரைவு வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொண்ட வாக்காளர்கள் பட்டியல் வெளியிடப்படும். இதற்கான விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் பெண்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கிய பேரணியை மாவட்ட ஆட்சியர் திரு ஸ்ரீகாந்த் கொடியசைத்து துவக்கி வைத்தார். ஏராளமான பெண்கள் கையில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர்.

Exit mobile version