தரங்கம்பாடி அருகே திருக்கடையூர் பேருந்து நிலையம் அருகில் நின்று கொண்டிருந்த புதுச்சேரி அரசு பேருந்தின் பின்புறம் தனியார் பேருந்து மோதி விபத்து சாலையோரம் துப்புரவு பணி செய்து கொண்டிருந்த தூய்மை பணியாளர் தலையில் காயம் பேருந்தில் பயணித்தவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். பொறையார் போலீசார் விசாரணை.
சிதம்பரத்திலிருந்து காரைக்கால் நோக்கி சென்று கொண்டிருந்த புதுச்சேரி அரசு பேருந்து மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் பேருந்து நிலையம் அருகில் பயணிகளை இறக்கிவிட்டு நின்றுகொண்டுஇருக்கும் போது பாண்டிச்சேரியில் இருந்து காரைக்கால் நோக்கி சென்ற தனியார் பேருந்து (பாலாஜி) புதுச்சேரி அரசு பேருந்தின் பின் புறம் மோதியதில் சாலை ஓரம் துமை பணி செய்து கொண்டிருந்த தங்கராசு என்பவர் காயம் அடைத்தார் மேலும் புதுச்சேரி அரசு பேருந்தில் பயணித்த முருகையன் மற்றும் தனியார் பேருந்தில் பயணம் செய்த பிரியதர்ஷினி, ஸ்ரீபதி, காயத்திரி உள்ளிட்ட 5 பெருக்கு காயம் ஏற்பட்டு திருக்கடையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டத்து. இதில் தூய்மை பணியாளர் தங்கராசு உள்ளிட்ட மூன்று பேர் மேல் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் இந்த விபத்து குறித்து பொறையார் போலீசார் விசாரணை மேற்றுக்கொண்டு வருகின்றனர்.
