கலுங்கடி சாலையில் பள்ளம் குடிநீர்குழாயில் உடைந்து நீர்வீணாகிறது5நாட்களாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கலுங்கடி பகுதியில் உள்ள சாலையில் கனரக வாகனங்கள் செல்வதால் பள்ளம் ஏற்பட்டு குடிநீர் குழாயில் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது – 5 நாட்களாகியும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி மக்களின் குடிநீர் தேவைக்காக பல்வேறு கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது , குறிப்பாக முக்கடல் அணையில் இருந்து நேரடியாக குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது , இந்த நிலையில் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 11வது வார்டு கலுங்கடி பகுதியில் உள்ள சாலையில் அதிக அளவில் கனரக வாகனம் செல்வதால் சாலையில் பள்ளம் ஏற்பட்டு சாலையின் கீழே அமைக்கப்பட்டிருந்த குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது இது தொடர்பாக புகார் அளித்தால் மாநகர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர் , ஐந்து நாட்களுக்கு மேலாக குடிநீர் குழாய் உடைந்து இரவு பகலாக பல்லாயிரம் லிட்டர் குடிநீர் வீணாகிறது இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட போவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version