மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காவல் சரகம், சீர்காழி தடாளன் தெற்கு வீதியில் வசித்து நகை அடகு கடை நடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தன்ராஜ் சௌத்திரி என்பவரது வீட்டில் கடந்த 27.01.2021ம் தேதி அதிகாலை ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மணீஸ், 2. ரமேஷ் பட்டேல், 3. மகிபால், 4.கருணாராம் ஆகியோர்கள் அத்துமீறி நுழைந்து அவரையும் அவரது குடும்பத்தினரையும் பயங்கரமான ஆயுதங்களால் தாக்கி தன்ராஜ் சௌத்திரியின் மனைவி ஆஷா மற்றும் அவரது மகன் அகில் ஆகியோரை கொலை செய்துவிட்டு, அவரது வீட்டிலிருந்து 12½ கிலோ தங்க நகைகள் மற்றும் 6.75 லட்சம் பணத்தை (மொத்த மதிப்பு 4 கோடியே 62 லட்சத்து எழுபத்தி ஐந்தாயிரம்) கொள்ளையடித்து சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக சீர்காழி காவல் நிலையத்தில் ஆதாய கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட எதிரிகளான ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 1. மனீஸ், 2. ரமேஷ் பட்டேல், 3. மகிபால், 4. கருணாராம் ஆகியோர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மற்றும் பணம் மீட்கப்பட்டது. கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மற்றும் பணம் மீட்கப்பட்ட போது மகிபால் காவல்துறையினரை தாக்கியபோது துப்பாக்கியால் என்கவுண்டர் செய்யப்பட்டார். பின்னர் மற்ற முன்று எதிரிகளும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டு அவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு வழக்கின் விசாரணையானது மயிலாடுதுறை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்நிலையில் வழக்கின் எதிரிகளான ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மணீஸ் கும்பகோணத்தைச் சேர்ந்த கருணாராம் ஆகியோரை குற்றவாளிகள் என தீர்மானித்து, கடந்த 22.04.2025ந் தேதி குற்றவாளிகளான மணீஸ் என்பவருக்கு மூன்று ஆயுள் தண்டனை மற்றும் கருணாராம் என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்து குற்றவாளிகள் இருவரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் ரமேஷ் பட்டேல் என்பவருக்கு 18.10.2022ந் தேதி மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 3 வருடங்களாக இவ்வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ரமேஷ் பட்டேல் (33) என்பவரை பற்றி கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்திரவின் பேரில் சீர்காழி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை மேற்பார்வையில் சீர்காழி காவல் ஆய்வாளர் கமல்ராஜ் என்பவரின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தனிப்படையினர் ராஜஸ்தான் மாநிலம் சென்றனர். நீண்டகாலமாக தலைமறைவாக இருந்து வந்த ரமேஷ் பட்டேலை பல இடங்களில் தேடி துப்பு வைத்தனர். இறுதியாக கிடைத்த முக்கிய தகவலின் அடிப்படையில் பதுங்கியிருந்த ரமேஷ் பட்டேல்லை (33) 24.10.2025ந் தேதி கைது செய்து ஜெய்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இடமாற்று பிடிக்கட்டளை பெற்று விமானம் மூலம் சென்னை அழைத்து வந்தனர். பின்னர் ரமேஷ் பட்டேலை மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் சென்று ரமேஷ் பட்டேல் என்பவரை கைது செய்து அழைத்து வந்த சீர்காழி காவல் ஆய்வாளர் கமல்ராஜ் என்பவரின் தலைமையிலான தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.ஸ்டாலின் வெகுவாக பாராட்டினார்.


















