நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் 42 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக அதிநவீன உடற்பயிற்சி கூடம்

கன்னியாகுமரி மாவட்டம்
நாகர்கோவில் வடசேரியில் அண்ணா விளையாட்டு அரங்கம் உள்ளது. இங்கு மாணவ மாணவிகள் பயிற்சி பெறும் வகையில் தடகளம் , கூடைப்பந்து , நீச்சல் குளம் மற்றும் மாணவிகளுக்கான விடுதி ஆகியவையும் உள்ளன. அண்ணா விளையாட்டு மைதானத்தில் பயிற்சி பெற்றவர்கள் மாநில, தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளிலும் சாதனை படைத்துள்ளனர். இங்கு பயிற்சி பெறும் மாணவ மாணவிகளுக்கு உடற்பயிற்சி கூடம் அமைக்க வேண்டும் என நீண்ட நாள் கோரிக்கை இருந்து வந்தது இந்நிலையில் விளையாட்டு அரங்கத்தில் 42 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ளது , இதில் நவீன உடற்பயிற்சி கருவிகள் , பழு தூக்கும் கருவிகள் உள்ளிட்ட வசதிகள் இந்த அதிநவீன உடற்பயிற்சி கூடத்தில் உள்ளது , இந்த உடற்பயிற்சி கூடத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் திறந்து வைத்தார் திறப்பு விழாவில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் உள்ளிட்ட பல கலந்து கொண்டனர் பின்னர் அமைச்சர் மனோ தங்கராஜ் மாணவ மாணவிகள் மத்தியில் அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் சுமார் 90 கிலோ எடையை தூக்கி (BENCH PRESS)பயிற்சியில் ஈடுபட்டார் , இதனை கண்ட மாணவிகள் கைதட்டி ஆரவாரத்தில் ஈடுபட்டனர் தொடர்ந்து
செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூருகையில் , இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மாணவ மாணவிகள் விளையாட்டு துறையில் பெருமளவு சாதித்து வருகின்றனர் முதலமைச்சர் கோப்பை காண போட்டியில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து பல்லாயிரம் பேர் பங்கேற்றது மகிழ்ச்சி தருகிறது என கூறினார்.

Exit mobile version