மயிலாடுதுறை அருகே சித்தர்காடு பகுதியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் 20 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள புதிய மாவட்ட மருந்து கிடங்கு கட்டிடத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்ற விழாவில் பூம்புகார், மயிலாடுதுறை, சீர்காழி சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்தார்கள்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே சித்தர்காடு பகுதியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் 20 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள புதிய மாவட்ட மருந்து கிடங்கு கட்டிடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள். மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் சித்தர்காட்டில் நடைபெற்ற விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதா எம்.முருகன் , பன்னீர்செல்வம், ராஜகுமார் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்தார்கள்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் மூலம் மக்களைத்தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் திட்டம், நலம் காக்கும் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம். இத்திட்டத்தின் மூலம் வட்டாரத்திற்கு 3 கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அக்கிராமங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு அனைத்து விதமான மருத்துவ சேவைகள் மக்களைத்தேடி மருத்துவம் திட்டம் மூலம் அனைத்து வீடுகளுக்கும் சென்று மருத்துவ பரிசோதனை செய்து, பொதுமக்களுக்கு எளிமையாக அனைத்து மருத்துவ சேவைகள் வழங்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில், மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் செல்வராஜ், சுகாதார துறை இணை இயக்குநர் பானுமதி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
