திருவாரூர் மாவட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூர் நவம்பர்,11-
S.I.R வாக்காளர்பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து திருவாரூரில் திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிகட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் புதிய ரயில்நிலையம் அருகில் திருவாரூர் மாவட்ட திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் தலைமையில் காங்கிரஸ் , சிபிஐ , சிபிஎம் , விசிக , மதிமுக , திக , தமுமுக , தமிழக வாழ்வுரிமைக்கட்சி உள்ளிட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டு
(S.I.R ) வாக்காளர்பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்தும் , இந்திய தேர்தல் ஆணையதை கண்டித்தும் , தேர்தலை ஆணையத்தை கைப்பாவையாக செயல்படுத்தும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும் முழக்கம் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சேர்ந்த பல்வேறு கட்சி நிர்வாகிகள் மற்றும் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து உள்ளிட்ட 3000 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Exit mobile version