முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மயிலாடுதுறை மாவட்ட விளையாட்டுப் பிரிவு சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டிகள் நடைபெற்றது. 13 வயதுக்குள்பட்ட மாணவர்களுக்கு செம்பனார்கோயில் காவல் நிலையத்தில் தொடங்கி ஏ.வி.சி. கல்லூரி வழியாக மாவட்ட ஆட்சியர் வளாகம் வரை 15 கி.மீ. தூரமும், 13 வயதுக்குள்பட்ட மாணவிகளுக்கு ஆறுபாதி மதிலடி அங்கன்வாடியில் தொடங்கி மாவட்ட ஆட்சியர் வளாகம் வரை 10 கி.மீ. தூரமும், 15 வயதுக்குள்பட்ட மற்றும் 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு செம்பனார்கோயில் கலைமகள் பள்ளியில் தொடங்கி ஏ.வி.சி. கல்லூரி வழியாக மாவட்ட ஆட்சியர் வளாகம் வரை 20 கி.மீ. தூரமும், 15 வயதுக்குள்பட்ட மற்றும் 17 வயதிற்குட்பட்ட மாணவியர்களுக்கு செம்பனார்கோயில் காவல் நிலையத்தில் தொடங்கி ஏ.வி.சி. கல்லூரி வழியாக மாவட்ட ஆட்சியர் வளாகம் வரை 15 கி.மீ. தூரமும் மிதிவண்டி போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் மற்றும் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறுவர்களுக்கு தலா ரூ.5,000, இரண்டாமிடம் பெறுபவர்களுக்கு தலா ரூ.3,000, மூன்றாமிடம் பெறுபவர்களுக்கு தலா ரூ.2,000, 4 முதல் 10 இடங்களை பெறுபவர்களுக்கு தலா ரூ.250 மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
