தமிழகத்திற்கு வழங்க வேண்டிய கல்வி தொகையை ஒன்றிய அரசு வழங்கும் வரை உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக திருவள்ளூர் எம்பி சசிகாந்த் செந்தில் அறிவித்து காலவரையறையற்ற உண்ணாவிரத்தை தொடங்கினார். இந்த போராட்டத்தில் அனைத்து ஜனநாயக சக்திகள், சமூகநீதி அமைப்புகள், தமிழ்நாடு மக்கள் இணையுமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழகத்திற்கு வழங்க வேண்டிய கல்வி தொகையை ஒன்றிய அரசு வழங்கும் வரை உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக திருவள்ளூர் எம்பி சசிகாந்த் செந்தில் அறிவித்து காலவரையறையற்ற உண்ணாவிரத்தை தொடங்கினார். இந்த போராட்டத்தில் அனைத்து ஜனநாயக சக்திகள், சமூகநீதி அமைப்புகள், தமிழ்நாடு மக்கள் இணையுமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.திருவள்ளூரில் உள்ள காங்கிரஸ் அலுவலகமான ராஜீவ் பவனில் திருவள்ளூர் எம்பி சசிகாந்த் செந்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர்,மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 2152 கோடி நிதியை நிறுத்தி வைத்துள்ளதாகவும் இதனால் 43 லட்சம் மாணவர்கள் மற்றும் 2.2 லட்சம் ஆசிரியர்களின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாகிள்ளதாகவும், நியாயமாக தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய நிதியை கொடுக்காமல் புதிய கல்விக்கொள்கை, அதன் மூலம் மும்மொழி கொள்கையையும் ஏற்றுக்கொள்ள வைக்க ஒன்றிய பாஜக அரசு முயல்வதாகவும், இதனால் குழந்தைகள் பாதிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினார். மேலும் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க நினைக்கும் பாஜக அரசு, குழந்தைகளை பகடைகாய்களாக நினைப்கதாகவும்,இந்த பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பேசி வருவதாகவும், தனிநபர் தீர்மானத்தை நிறைவேற்ற முயற்சித்ததாகவும், பாராளுமன்றத்தில் 377 விதி-இன் கீழ் மற்றும் பாராளுமன்ற பூஜ்ஜிய நேரத்திலும் எழுப்ப முயன்றதாகவும், ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கும் கடிதம் எழுதியுள்ளதாகவும் தெரிவித்தார்.இதனை கண்டித்து காலவரையறையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் இந்த போராட்டத்தில் அனைத்து ஜனநாயக சக்திகள், சமூகநீதி அமைப்புகள், தமிழ்நாடு மக்கள் இணையுமாறும் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் பொதுமக்களுக்கு போக்குவரத்துக்கோ எந்த பாதிப்பும் இல்லாத வகையில் தனது அலுவலகத்தில் இந்தப் போராட்டம் நடைபெறுவதாகவும், ஒன்றிய அரசு நிதி வழங்கும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடரும் எனவும் அறிவித்து உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியதால் திருவள்ளூர் மாவட்டத்தில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டுள்ளது.
