மாத்தாம்பட்டினம் கிராமத்தில் பிரதான சாலையில் பள்ளிக்கு சென்றால் ஏற்படும் நேரவிரயத்தை தடுக்க ஆபத்தான முறை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த தென்னாம்பட்டினம் ஊராட்சிக்கு உட்பட்ட மாத்தாம்பட்டினம் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தென்னாம்பட்டினம் கிராமத்திலிருந்து மாத்தாம்பட்டினம் கிராமத்திற்கு சென்று வர பிரதான சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த மாணவ,மாணவிகள் 40 க்கும் மேற்பட்டோர் அருகே உள்ள கோணயாம்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர்.இவர்கள் பிரதான சாலை வழியாக கோணயாம்பட்டினம் பள்ளிக்கு சென்றால் 4 கி.மீ தூரம் வரை செல்லவேண்டும். எனவே தங்கள் கிராமத்தை ஒட்டி மைந்துள்ள வடிகாவ் ஆறான முல்லை ஆற்றில் மூங்கில் பாலம் அமைத்து மறுபுறம் உள்ள கோணயாம்பட்டினம் கிராமத்திற்கு எளிதில் சென்று வருகின்றனர்.பல ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ள தற்காலிக மூங்கில் பாலத்தை அவ்வப்போது ஊராட்சி சார்பாக மராமத்து பணி செய்து பயன்படுத்திவந்தனர்.இந்நிலையில் தற்போது மூங்கில் பாலம் வலுவிழந்து பழுதடைந்துள்ளது. இதில் மாணவ மாணவிகள் பொற்றோர் உதவியுடன் ஆபத்தான முறையில் கடந்து சென்று வருகின்றனர்.எனவே பள்ளி மாணவ, மாணவிகள் நலன் கருதி மாத்தாம்பட்டினம் – கோணயாம்பட்டினம் இடையே முல்லையாற்றில் காங்கிரிட் நடைபாலம் அமைத்துதர வேண்டும் என பொற்றோர் மற்றுற் மாணவ மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version