பெருந்தலைவர் காமராஜர் மீது அவதூறு பரப்பிய யூடியூபர் முக்தர் அப்பாஸ் மீது வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி, நூற்றுக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்து, நாடார் சங்கங்கள் சார்பில் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் செய்தனர் :-
யூடியூபர் முக்தர் அப்பாஸ் என்பவர் youtube சேனல் ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியின் பொழுது மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் குறித்து அவதூறான செய்தி ஒன்றை வெளியிட்டு இருந்தார். அவரது இந்த கருத்துக்கள் மறைந்த பெருந்தலைவரின் புகழுக்கு களங்கம் கற்பிப்பதாக தெரிவித்து நாடார் சங்கங்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதன்படி இன்று மயிலாடுதுறையில் மாயூரம் நாடார் உறவின்முறை தர்ம பரிபாலன சங்கம் மற்றும் அனைத்து நாடார் கூட்டமைப்பு சார்பில் இன்று மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. முக்தர் அப்பாஸ் உண்மைக்கு மாறான குற்றச்சாட்டை தெரிவித்து இருப்பதால் அவர் மீது கடுமையாக நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என்று நாடார் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளனர். முக்தார் அப்பாஸை கைது செய்ய வலியுறுத்தியும், அவரது யூடியூப் சேனலை முடக்க வலியுறுத்தியும், நாடார் சங்கத்திலிருந்து ஊர்வலமாக வந்து மயிலாடுதுறை காவல் நிலையம், மயிலாடுதுறை காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு புகார் மனு அளித்துள்ளனர்.
பைட் :-
ரவிச்சந்திரன் – நாடார் சங்க பொறுப்பாளர்
