தருமபுரம் குருஞானசம்பந்தர் மேல்நிலைப் பள்ளியில்  நடைபெற்ற ஆசீர்வாத திருநாள் நிகழ்ச்சி .ஆதீனத்தின் உருவத்தை வரைந்த9-ம் வகுப்பு மாணவி

மயிலாடுதுறை தருமபுரம் குருஞானசம்பந்தர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆசீர்வாத திருநாள் நிகழ்ச்சிக்கு வந்த தருமபுரம் ஆதீனத்தின் உருவத்தை கோலமாவால் வரைந்து அசத்திய ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி. மாணவியின் திறமையை ஊக்குவிக்கும் வகையில் பரிசு வழங்கி சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்து வாழ்த்திய ஆதினம்:-

மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான குருஞான சம்பந்தர் மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு எழுத உள்ள மாணவர்கள் மாதா பிதா குரு தெய்வத்தை வணங்கும் ஆசிர்வாத திருநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்றார். நிகழ்ச்சிக்கு வந்த தருமபுரம் ஆதீனத்தை கவரும் வகையில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ஜெயஸ்ரீ என்ற மாணவி தருமபுரம் ஆதினத்தின் உருவப் படத்தை கலர் கோலமாவால் ஒன்றரை மணி நேரம் எடுத்துக்கொண்டு தத்ரூபமாக வரைந்து அனைவரின் பாராட்டைப் பெற்றார். ஆசிர்வாத திருநாள் முடிவடைந்து மாணவ மாணவியர்களுக்கு எழுது பொருள் வழங்கிய நிலையில் மாணவி ஜெயஸ்ரீ கோலமாவால் வரைந்த தன்னுடைய உருவப் படத்தை பார்த்து ஆச்சரியப்பட்ட தருமபுரம் ஆதீனம் மாணவிக்கு சால்வை அனுவித்து பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்து அருளாசி வழங்கினார். மாணவியை பள்ளி நிர்வாகிகள்,ஆசிரியர்கள் பாராட்டினர்.

Exit mobile version