சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணைந்து உருவாக்கியுள்ள “கூலி” திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா உள்ளிட்ட பல பிரபல நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.
தற்போது வரை வெளியான பாடல்களில் “சிக்கிடு”, “மோனிகா”, மற்றும் “கூலி: தி பவர்ஹவுஸ்” ஆகியவை அனைவரையும் கவர்ந்து, மெகா ஹிட்டாகி உள்ளன. குறிப்பாக பவர்ஹவுஸ் பாடல், பட்டி தொட்டி எங்கும் வைரலாக பரவி வருகிறது.
படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, ஆகஸ்ட் 2-ம் தேதி சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இதில் படக்குழுவினர் முழுமையாக பங்கேற்க உள்ளனர்.
“கூலி” திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடப்பட உள்ளது. ரசிகர்கள் இதற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
















