- ”நேர்மையான போலீஸ் அதிகாரியை பழி வாங்குவது ஒரு நல்ல அரசுக்கு அழகு அல்ல” என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
- பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பற்றிய வாழ்க்கை ‛அய்யா’ என்ற பெயரில் படமாக தயாராகிறது. இப்படத்தை அக்கட்சியின் கவுரவத் தலைவர் ஜிகே மணியின் மகன் ஜிகேஎம் தமிழ்க்குமரன் தயாரிக்கிறார். சேரன் இயக்க, ராமதாஸ் கதாபாத்திரத்தில் ஆரி அர்ஜுனன் நடிக்கிறார்.
- ‘எளிய மக்களுக்கான பாரதப் பிரதமரின் மக்கள் நலத்திட்டங்களான பிரதமரின் வீடுகட்டும் திட்டம், ஜல் ஜீவன், பாரதப் பிரதமரின் கிராமப்புற சாலைகள் திட்டம் எனப் பல திட்டங்கள் மூலம் பெறப்படும் நிதிகள் எங்கு தான் செல்கிறது?,’ என்று பாஜ மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
- மாலத்தீவு சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் முகமது முய்சுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
- ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை பற்றி ஜூலை 28ல் லோக்சபாவில் 16 மணி நேரமும், ஜூலை 29ல் ராஜ்யசபாவில் 16 மணி நேரமும் விவாதிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
- மும்பைக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக, புறப்பட்ட சிறிதுநேரத்திலேயே ஜெய்ப்பூர் திரும்பியது.
- நான் வெறும் விமர்சகனாக மட்டும் பார்லிமென்ட் வரவில்லை; இந்தியா என்ற தேசத்துக்கு என் பங்களிப்பை செலுத்த வந்திருக்கிறேன். எதிர்க்க வேண்டிய விஷயங்களை, காரணத்தோடு எதிர்ப்பேன். ஆதரிக்க வேண்டிய விஷயங்களை உறுதியோடு ஆதரிப்பேன். ஆலோசனை கூற வேண்டிய இடத்தில் ஆக்கபூர்வமாக சொல்வேன் என ராஜ்யசபா எம்.பி., கமல் தெரிவித்துள்ளார்.
- ட்ரோனில் இருந்து ஏவுகணையை ஏவி சோதனை செய்து இந்தியா சாதனை படைத்துள்ளது.
- சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் நடந்த அனைத்து கட்சிக் கூட்டத்தில், பார்லிமென்டை சமூகமாக நடத்த ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டது.
- சட்டங்களை விதி மீறியதால் உல்லு மற்றும் ஆல்ட் உள்ளிட்ட 25 ஆபாச ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டது.