- அதிமுக – பாஜ கூட்டணி வலிமையான கூட்டணி. வெற்றிக் கூட்டணி. 2026 சட்டசபை தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறுவோம், என்று தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.
- நாட்டில் இதுவரை 16 முறை துணை ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 4 முறை மட்டுமே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிகழ்வு நடந்துள்ளது.
- நாடு முழுவதும் கடந்த 6 மாதங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 26,770 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
- இப்படியெல்லாம் பேச வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்க்கு யாரோ சொல்லித் தருகிறார், என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
- டிஎன்பிஎஸ்சி குரூப் -4 தேர்வில் யாரோ செய்த தவறுக்காக, தேர்வுக்கு தயாரான இளைஞர்கள் பலியாக்குவதில் நியாயமில்லை என்று தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
- கூட்டணியில் சேர, த.வெ.க., தலைவர் விஜய்க்கு, அ.தி.மு.க., தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறது. அதை, விஜய் ஏற்கவில்லை. ‘தி.மு.க.,வின், ‘பி டீம்’ தான் விஜய்; எத்தனை முறை அழைத்தாலும், அவர் கூட்டணிக்கு வர மாட்டார்’ என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியிடம் தெரிவிக்க, பா.ஜ., மேலிடம் ஆதாரங்களை திரட்டி வருகிறது.
- மும்பை சத்ரபதி சிவாஜி மகராஜ் சர்வதேச விமான நிலையம் தொடர்ந்து 3வது ஆண்டாக உலகின் டாப் 10 விமான நிலையங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
- பயங்கரவாதத்தை ஆதரிப்பதற்கும் அதன் பொருளாதாரத்தை தவறாக நிர்வகிப்பதற்கும், ஐ.நா.,வில் பாகிஸ்தானை இந்தியா கடுமையாக சாடி உள்ளது.
- அல்கொய்தா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த நான்கு பேரை குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
- ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து நடக்கும் விவாதத்தில் வரும் செவ்வாய் ( ஜூலை29) அன்று பிரதமர் மோடி பதிலளித்துப் பேசுவார் என தகவல் வெளியாகி உள்ளது.