சென்னை : தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்ட போது லேசான உடல்நலக்குறைவு ஏற்பட்டு, சென்னை கிரிம்ஸ் ரோட்டில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தினமும் நடைபயிற்சி மேற்கொள்வது அவருடைய வழக்கமான பழக்கமாகும். இந்நிலையில் இன்று காலை நடைபயிற்சியின் போது அவருக்கு சிறிய அளவில் தலைசுற்றல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து, எச்சரிக்கையின் கீழ் உடனடியாக மருத்துவ பரிசோதனைகளுக்காக அவர் அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து அப்போலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தலைசுற்றல் காரணமாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ பரிசோதனைகளுக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், மேலதிக தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.