- முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ், எந்தெந்த தனியார் மருத்துவமனைகளில், என்னென்ன சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன என்பதை அறிந்து கொள்ளும் வகையில், மேம்படுத்தப்பட்ட மொபைல் போன் செயலி, விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது.
- கும்மிடிப்பூண்டி அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளி கைது செய்யப்படாததை கண்டித்து, ஆரம்பாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட முயன்ற அ.தி.மு.க.,வினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
- பூந்தமல்லி கிளைச்சிறையில், மொபைல் போன் கண்டுபிடிக்கப்பட்டதால் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்ட 10 போலீசாரில் ஆறு பேர் மீண்டும் பணியில் சேர்ந்த நிலையில், இன்னும் நான்கு பேருக்கு பணி வழங்காமல் அலைக்கழிக்கப்பட்டு வருவதாக புலம்புகின்றனர்.
- தமிழக கிராமங்களில் உள்ள இளைஞர்களின் தொழில் ஐடியாவை, புத்தொழில் நிறுவனமாக உருவாக்க, ‘கிராமந்தோறும் புத்தொழில்’ திட்டத்தை செயல்படுத்தும் பணியில், தமிழக அரசின் ஸ்டார்ட் டி.என்., நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
- ‘தத்கால்’ டிக்கெட் முன்பதிவின்போது, ஐ.ஆர்.சி.டி.சி., செயலியில் குவியும் விளம்பரங்களால், அடிக்கடி ‘சர்வர்’ பாதிக்கப்படுகிறது. இதனால், டிக்கெட் முன்பதிவின்போது பயணியர் அவதிப்படுகின்றனர்.
- கர்நாடக மாநிலம், பெலகாவி மாவட்டத்தைச் சேர்ந்தவர் நாராயண் கணேஷ் காமத்; அரசு ஒப்பந்ததாரர். இவர், சிறிய நீர்ப்பாசனத் துறையின் பணியை எடுத்து, சிக்கோடியில் துாத்கங்கா ஆற்றின் குறுக்கே, 1992 – 93ல் தடுப்பணை கட்டினார்.
- மஹாராஷ்டிராவின் மும்பையில் நடந்த கிங் படப்பிடிப்பில் படுகாயம் அடைந்த ஹிந்தி நடிகர் ஷாருக் கான், சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுஉள்ளார்.
- மதமாற்ற வழக்கில் கைதான சங்கூர் பாபா, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் உறுப்பினர் போல் காட்டிக்கொண்டு, பிரதமர் மோடி படத்தை வைத்து, ‘லெட்டர் பேடு’ போட்டு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
- சீனா தன் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே, 14 லட்சம் கோடி ரூபாயில் உலகின் மிகப்பெரிய அணை கட்டும் பணியைஅதிகாரப்பூர்வமாக துவங்கியது.
- பாலஸ்தீனத்தின் காசாவில் போர் துவங்கிய 2023க்கு பின் முதன் முறையாக நேற்று 12ம் வகுப்பு தேர்வு நடைபெற்றது.