சிவகங்கை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம், சர்ச்சை பேச்சு குறித்து மூத்த அரசியல்வாதி சிவா விளக்கத்தை அளித்துள்ளார்.
அத்துடன் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட வேண்டும் என்றும், சர்ச்சைகளையே பார்த்துக் கொண்டிராமல் மக்களின் அன்றாட பிரச்சினைகள் நிறைய உள்ளது அதில் நாம் கவனத்தை செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
அதிமுகவுடன் பெரிய கட்சி கூட்டணிக்கு வரும் என்பது பெரும்பாலும் அமெரிக்காவின் டொனால்ட் ட்ரம்ப் கூட இருக்கலாம் கிண்டல் அடித்த கார்த்திக் சிதம்பரம், எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுடன் கூட்டணி வைத்தது அதிமுக கட்சியினருக்கு கூட பிடிக்கவில்லை என்றவர், வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக இருக்கும் தொகுதியை நாங்கள் கேட்டு பெறுவோம் என்றும், சிவகங்கை தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கினால் தகுதியான வேட்பாளர்களை நிறுத்தி எங்களால் ஜெயிக்க வைக்க முடியும் என்றார்.
மேலும், தன்னை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தும் விஜய் நிச்சயம் அதிமுக-பாஜக கூட்டணியில் சேர வாய்ப்பில்லை என கார்த்திக் சிதம்பரம் தெரிவித்தார்.