“ஒட்டு கேட்கும் விவகாரம் இரண்டு, மூன்று நாட்களில் அம்பலமாகிவிடும்,” என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ளன. கொஞ்சம் பொறுமையா இருக்கணும். அந்த நேரத்தில் உங்கள் யோசனைகளையும் கேட்கிறேன். யாருடன் கூட்டணி வைக்கணும்னு யோசனை சொல்வீங்களா?” என குறிப்பிட்டார்.
ஒட்டு கேட்கும் கருவி தொடர்பான விவகாரத்தில், “அந்த கருவியை யார் வைத்தார்கள், யார் சார்ஜ் செய்தார்கள், யார் சொன்னார்கள் என்பது பற்றிய விசாரணை நடைபெற்று வருகிறது. இது இன்னும் 2-3 நாட்களில் அம்பலமாகும்,” என்றார்.
இதையடுத்து, ஒரு செய்தியாளர், “இந்த விவகாரத்தில் உங்களுக்கு யாராவது மீதம் சந்தேகம் இருக்கிறதா?” எனக் கேட்டார். “சந்தேகம் இருக்கிறது, உங்கள் மேல் தான் இருக்கிறது,” என ஜோக் அடித்தார் ராமதாஸ்.
பின்னர் அவர் கூறியதாவது, “போலீசார் விசாரணையைத் தொடங்கிவிட்டனர். இன்று காலை 8 பேர் வந்துகொண்டு முதற்கட்ட விசாரணை நடத்தியுள்ளனர். சைபர் கிரைம் பிரிவினர் மைனஸ் லெவலுக்குப் போயிருக்கிறார்கள். சைபர் கிரைம் பிரிவு தமிழ்நாட்டில் இருக்கிறதா இல்லையா என்பது போல உள்ளது,” என தெரிவித்துள்ளார்.