ஆடி மாதம் பிறப்பை முன்னிட்டு, காரைக்குடியில் உள்ள ஜவுளிக் கடையில், பட்டுப் புடவைகள் தள்ளுபடி விலையில் விற்கப்பட்டன. ஏராளமான பெண்கள் தங்களது விருப்பமான புடவைகளை வாங்கிச் சென்றனர்.
ஆடி மாதத்தில் பெரும்பாலும், வீடுகளில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறாது. இதனால், ஜவுளிக்கடைகளில் நீண்ட காலமாக விற்பனை செய்யப்படாத, துணி ரகங்களை தள்ளுபடி விலையில் விற்பனை செய்வது வழக்கம். அந்த வகையில், காரைக்குடியில் உள்ள பிரபல தனியார் ஜவுளிக்கடையில், இன்று 20 முதல் 60 சதவீதம் வரை, தள்ளுபடி அறிவிக்கப்பட்டது.
இதனால், கடை திறக்கும் முன்னரே காத்திருந்த பெண்கள், முண்டியடித்துக் கொண்டு உள்ளே சென்று, தங்களுக்கு பிடித்தமான புடவைகளை மொத்தமாக வாங்கிச் சென்றனர்.