இங்கிலாந்து மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது.
நாட்டிங்ஹாமில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா 1–0 என முன்னிலை பெற்றது. இந்த போட்டியில் தனது முதல் சர்வதேச டி20 சதத்தை பதிவு செய்த ஸ்மிரிதி மந்தனாவின் அபார பங்களிப்பு இந்திய வெற்றிக்கு காரணமாக அமைந்தது.
இதையடுத்து கவுண்டி கிரவுண்டில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியிலும் இந்தியா தன்னம்பிக்கையுடன் விளையாடி, 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன் மூலம் தொடரில் 2–0 என முன்நிலையைக் கைப்பற்றியுள்ளது.
பரபரப்பான போட்டி : முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 181 ரன்கள் குவித்தது. ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் அமஜோத் கௌர் இருவரும் அரைசதங்கள் அடித்து சிறப்பாக களமிறங்கினர்.
பின்னர் 182 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 157 ரன்கள் மட்டுமே எடுத்துவிட்டு தோல்வியைத் தழுவியது.
வரலாறு படைக்கும் இந்தியா :
இந்த தொடரில், 5 போட்டிகளில் தொடருக்குள் முதலிரு போட்டிகளில் இங்கிலாந்து முதன்முறையாக தோல்வியை சந்தித்து வரலாற்று பதிவில் இடம்பிடித்துள்ளது. மேலும், இங்கிலாந்து மண்ணில் இதுவரை ஒரு டி20 தொடரையும் வெல்லாத இந்திய மகளிர் அணி, இந்த தொடரை வென்று புதிய வரலாறு படைக்கும் வாய்ப்பில் இருக்கிறது.















