வேலூர் லாங்கு பஜார் மண்டி தெருவில் கடைகள் அடைப்பு – லோடு வாகனங்களுக்கு நேரக்கட்டுப்பாடு விதித்ததால் வியாபாரிகள் எதிர்ப்பு, மாநகராட்சி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை
வேலூர் மாவட்டத்தில் மளிகை பொருட்கள் மொத்த விற்பனைக்கு பெயர் பெற்ற லாங் பஜார் மண்டி தெருவில் லோடு வாகனங்களுக்கு நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் வியாபாரிகள் அனைத்து கடைகளையும் அடைத்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. தற்போது மாநகராட்சி அதிகாரிகளுடன் மண்டி சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
மாநகராட்சி அடாவடி செய்வதால் வணிகர்கள் பாதிக்கப்படுவதாக கூறி இந்த கடை யடைப்பு நடந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது







