விழுப்புரம் அருகே அரசு டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா
விழுப்புரம் மாவட்டம் திருவண்ணாமலை செல்லும் சாலையில் அமைந்துள்ளது கக்கணுர் இந்த கக்கனூர் ஊராட்சிக்குட்பட்ட அரியலூர் திருக்கை பேருந்து நிறுத்தத்தில் இருந்து புதுப்பேட்டைக்கு செல்லக்கூடிய சாலையில் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளதால் நான்கு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி வருவதாகவும் இது குறித்து பல முறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் பாதிப்படைந்த பொதுமக்கள் இன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்
















