தேமுதிக தனித்து நின்று தேர்தலை சந்திக்காது. நிச்சயமாக கூட்டணி அமைக்கும். தமிழகத்தில் இருக்கும் அனைத்து கட்சிகளுமே தேமுதிகவின் தோழமை கட்சிகள் தான்- தங்கம், வெள்ளி விலை உயர்வை கட்டுப்படுத்த அறிவிப்பு இல்லை
யானை பசிக்கு சோளப்பொறி தான் இந்த பட்ஜெட் என
பிரேமலதா விஜயகாந்த் நாகர்கோவில் அருகே ராஜாக்கமங்கலம் பகுதியில் பேட்டி
கன்னியாகுமரி மாவட்டம்
நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி தேமுதிக பூத் முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில்
மத்திய அரசின் பட்ஜெட் பிளஸ் அண்ட் மைனஸ்னு சொல்லலாம்.
தமிழ்நாட்டிற்கு சென்னை- கோயம்பத்தூர், சென்னை- கொல்கத்தா போன்ற நிறைய ரயில்வே டிராக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது.
விலைவாசி கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் இல்லை
தங்கம், வெள்ளி விலை உயர்வை கட்டுப்படுத்த அறிவிப்பு இல்லை
யானை பசிக்கு சோளப்பொறி தான் இந்த பட்ஜெட்.
தேமுதிக தனித்து நின்று தேர்தலை சந்திக்காது. நிச்சயமாக கூட்டணி அமைக்கும். தமிழகத்தில் இருக்கும் அனைத்து கட்சிகளுமே தேமுதிகவின் தோழமை கட்சிகள் தான்
தமிழ்நாட்டில் மூன்றாவது அணி பற்றி இப்போது சொல்ல முடியாது.
விஜய் மீதான அதிமுகவின் தாக்குதல் பற்றி விஜய் தான் பதில் சொல்ல வேண்டும்
கூட்டணி பேச்சுவார்த்தை கட்சி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கலந்து பேசித்தான் முடிவு எடுக்கப்படும்.
தேர்தலில் வெற்றி ஒன்றுதான் முக்கியத்துவம்
தலைமைப் பொறுப்பில் இருக்கும் நான் நிச்சயமாக வருகின்ற சட்ட மன்ற தேர்தலில் போட்டியிடுவேன் என கூறினார்.

















