சீர்காழி அருகே பேருந்து நிழற்குடையில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை, பொதுமக்கள் சாலை மறியல் செய்த நிலையில், விற்பனை குறித்து எடுத்துக் கூறிய பொதுமக்களை பார்த்து, ஏன் அநாகரிகமாக நடந்து கொள்கிறீர்கள் என்று பொதுவெளியில் கேட்ட சீர்காழி தாசில்தார் :-
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பனங்காட்டங்குடி செல்லும் சாலையில் ஊமைமதகு என்ற இடத்தில் பேருந்து நிழற்குடை அமைந்துள்ளது. இந்த இடத்தில் இருந்து ஆளஞ்சேரி அரூர் ஏலக்குடி உள்ளிட்ட ஐந்து கிராமங்களுக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் பேருந்துக்காக பயன்படுத்துகின்றனர். இதன் அருகில் உள்ள கடையில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகின்றது. மேலும் டாஸ்மாக் கடை 12 மணிக்கு திறப்பதற்கு முன்பே பேருந்து நிழற்குடையில் மது விற்பனை துவங்கப்படுகிறது. இதனை கண்டித்து அரூர், ஆலஞ்சேரி, ஏனாங்குடிமன்னங்கோயில், தத்தங்குடி ஐவேலி ஆகிய ஐந்து கிராமங்களைச் சார்ந்த பொதுமக்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன் ஆகியோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சீர்காழி டிஎஸ்பி அண்ணாதுரை தாசில்தார் திருமதி அருள்ஜோதி ஆகியோர் நேரில் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது பேருந்து நிழற்குடையில் மதுபினை தொடர்பான பாட்டில்கள் கிடப்பதை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் எடுத்து காண்பித்தனர். ஏன் இப்படி அநாகரிகமாக நடந்து கொள்கிறீர்கள் என்று தாசில்தார் அருள்ஜோதி உண்மையை எடுத்துரைத்த பொதுமக்களை பார்த்து கேள்வி எழுப்பினார். விளம்பர திமுக ஆட்சியில் சட்டவிரோத மது விற்பனையை தடுக்க முடியாத நிலையில் அதை தட்டிக் கேட்ட பொது மக்களை பொதுவெளியில் அநாகரிகமாக நடந்து கொள்கிறீர்கள் என்று தாசில்தார் பேசிய காட்சி தற்பொழுது வைரலாக பரவி வருகிறது
















