சம்பா பருவ நெல் கொள்முதலுக்கு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் துவக்கி வைத்தார்.
திருவள்ளுர் மாவட்டம். திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காஞ்சிபாடி கிராம ஊராட்சி சேவை மைய கட்டடத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் திருவள்ளுர் மாவட்டத்திற்கான சம்பா பருவ நெல் கொள்முதலுக்கு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா ஒன்றிய செயலாளர் கூளூர் ராஜேந்திரன் தலைமையில் கஞ்சிபாடியில் நடைபெற்றது. இதில் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் கலந்து கொண்டு தொடங்கிவைத்தார். அதனைத் தொடர்ந்து ஒன்றிய துணை செயலாளர் சரவணன் ஏற்பாட்டில் 300 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் ராஜேந்திரன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் விஜயகுமாரி, இளைஞரணி அமைப்பார் யுவராஜ் உள்ளிட்ட அலுவலர்கள் விவசாயிகள் பெண்கள் என திரளாக கலந்துகொண்டனர்.

















